நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது
இதனை கொண்டு வந்த ஐக்கிய தேசியகட்சியே 40 வருடங்களின் பின்னர் அதனை நீக்கவேண்டும் என்று கோருவது வரவேற்கக்த்தக்கது என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாஸிஸ கொள்கைக்கு இட்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டார்
அனுபவ ரீதியாக இதனை உணர்ந்தநிலையிலேயே மக்கள் அதனை விமர்சிக்க ஆரம்பித்ததாகவும் ஹேரத் தெரிவித்தார்
இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கும் 19வது அரசியல் அமைப்பு சட்டமூலத்தை தமது கட்சி ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்