நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றிற்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்ள தொடர் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
அன்றைய இரவை அவையிலேயே கழித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமையை எதிர்த்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 20ம் திகதி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்து. குறித்த தினத்தில் மதுபானம் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டு அருந்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உணவகத்தில், பைற்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.