Breaking
Wed. Dec 25th, 2024

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர்.

அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும் இலங்கைக்கு விமானமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, கட்டுநாயக்க விமானநிலையம் வந்தடைந்த இவர்களை கைதுசெய்த குற்றப்புலனாய்வு பிரிவினர் இவர்களை இன்று (23) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

By

Related Post