Breaking
Sun. Dec 22nd, 2024

தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார்.

தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் மஹிந்த சந்;தித்திருந்தார்.

மே தினக் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் தீவிர முனைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு (26) அளவில் மஹிந்த நாடு திரும்பியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து விஜயத்தின்போது உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post