Breaking
Thu. Jan 9th, 2025

எந்தக் காரணத்துக்காக மக்கள் பிளவுண்டாலும், பிளவுபடுத்தப்பட்டாலும் பேரழிவையே சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை மாகம்புர ருஹுணு மரபுரிமை அருங்காட்சியகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைவது போல, ஏனைய அரசியல் கட்சிகளினது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அனைவரும் இணைந்து நாட்டில் வறுமையிலுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post