Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போலி வைத்தியர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வருவதாகவும் நலிந்த ஹேரத் சுட்டிக்காட்யுள்ளார்.

போலி வைத்தியர்கள் குறித்து பிரதேச மட்டத்தில் தமது சங்கத்திற்கு கிடைக்கும் தகவல்களை எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பித்து வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மேல் மாகாணத்திலேயே அதிகளவான போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post