Breaking
Mon. Dec 23rd, 2024

– ஏ.ஆர்.ஏ.பரீல் –

நாடெங்கும் முறை­யற்ற விதத்தில் வக்பு சட்­டத்­துக்கு முர­ணாக பயன்­ப­டுத்­தப்­படும் வக்பு சொத்­துக்­களை மீட்­டெ­டுத்து சமூ­கத்தின் நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை வகுப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரி­வித்தார்.

முறை­யற்ற விதத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பயன்­ப­டுத்தும் வக்பு சொத்­துகள் தொடர்பில் வின­வி­ய­போதே வக்பு சபையின் தலைவர் யாஸீன் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,வக்பு சொத்­துக்கள் பெறு­ம­தி­மிக்­கவை.

அவை அல்­லாஹ்வின் சொத்­துக்­க­ளாகும். வக்பு சட்­டத்தின் கீழ் சொத்­துக்­களைக் கண்­கா­ணிக்கும் அதி­காரம் வக்பு சபைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. வக்பு சொத்­துக்­க­ளி­லி­ருந்து கிடைக்கும் வரு­மானம் முஸ்­லிம்­களில் தேவை­யா­ன­வர்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
நாட்டில் இன்று அதி­கமான வக்பு சொத்­துக்கள் பள்­ளி­வாசல் தர்கா நிர்­வா­கி­க­ளினால் முறை­யற்ற வகையில் குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. நிர்­வா­கி­களின் உற­வி­னர்­க­ளுக்கு மிகவும் குறைந்த வாட­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பத­விக்­காலம் 3 வரு­டங்­க­ளாகும்.

அதனால் மூன்று வரு­டங்­க­ளுக்கே வக்பு சொத்­துக்கள் குத்­த­கைக்கு வழங்­கப்­பட வேண்டும். ஆனால் பல இடங்­களில் 99 வருட குத்­த­கைக்கு வக்பு சொத்­துக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றை மீட்­டெ­டுப்­ப­தற்­காக முயற்­சி­களில் வக்பு சபை ஈடு­ப­ட­வுள்­ளது. இதற்­கான திட்­டங்கள் வகுக்­கப்­ப­ட­வுள்­ளன.

வக்பு சட்டம் மீறப்­பட்டால் உரி­ய­வர்­க­ளுக்கு நீதி மன்றம் மூலம் தண்­டனை பெற்றுக் கொடுக்­கப்­படும். அதி­க­மான நிர்­வா­கங்கள் வக்பு சொத்­துக்­க­ளி­லி­ருந்து கிடைக்கும் வரு­மா­னத்தை ஒழுங்­காக வெளி­யி­டு­வ­தில்லை. வக்பு சபைக்கு சமர்ப்­பிப்­ப­தில்லை. வரு­மானம் ஒழுங்­காகக் காட்­டப்­ப­ட­வேண்டும்.

கிடைக்கும் வரு­மா­னத்தில் 6% முஸ்லிம் நலன்­புரி நிதி­யத்­துக்கு ஒதுக்­கப்­பட வேண்டும். இவ்­வாறே வக்பு சட்டம் தெரி­விக்­கி­றது. இந்த 6% வீத வரு­மானம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் சமூ­கத்­துக்குள் ஏற்­படும் சமய கலா­சார பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை வக்பு சட்­டத்தின் மூலமே பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

இதை ­வி­டுத்து எமது சமய கலா­சார மற்றும் பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள பொலிஸ் நிலையம் செல்­வது தவிர்க்­கப்­பட வேண்டும். எமது பிரச்சினைகளை நாமே எமக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக மீள் கட்டமைப்புக்கான வழி வகைகள் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்தே மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

By

Related Post