Breaking
Sat. Dec 28th, 2024

நாட்டின் அனைத்து அரச மருத்துவபீட மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி ஹைலெவல் பாதையினூடாக தும்முல்லைக்குச் சென்று பம்பலப்பிட்டி, காலி வீதியினூடாக பிரதமரின் அலுவலகம் நோக்கிச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மருத்துவபீட மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹைலெவல் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த பாதையினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

By

Related Post