Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு  குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு அருகாமையில் உச்சிப்புளி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் 75 சயனைட் குப்பிகள், 7 கைத்தொலைபேசிகள், 300 கிராம் சயனைட் பவுடர் உட்பட மேலும் பல பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர்.

இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் கயனாத் ஜயவீர இவ்வாறு தெரிவித்தார்.

Related Post