Breaking
Mon. Nov 25th, 2024

இந்த நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (04) தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்;தவ போதகர்கள் ஒன்றியத்தின் பாஸ்கா பண்டிகை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் அவர்கள் சார்ந்த மத உரிமை மத சுதந்திரமுண்டு. அவர்கள் தமது மதத்தை பின் பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு மதக்கோட்பாடும் முக்கியமாகும்.

பல மொழி பேசுகின்ற பல விதமான மக்களையும் பின் பற்றுகின்ற அனைத்து மக்களையும் ஒன்றினைத்து அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எமது அரசாங்கம் செய்து வருகின்றது. சகவாழ்வையும் சகோரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். நல்ல சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டும்.

நீண்ட கால யுத்தத்தினால் நாம் அனைவரும் பல கஷ்டங்களை அனுபவித்தோம். மீண்டும் அவ்வாறான ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்க கூடாது. மத நம்பிக்கையின் மூலமும் நியாயமான நிலைமையை ஏற்படுத்தல், வறுமையை இல்லாதொழித்தல் கல்வி வளத்தை அதிகரித்தல் எல்லா பிரஜைகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தல், நல்ல பொருளாதார நிலையை ஏற்படுத்தல் போன்றவற்றால் மூலமுமே நாம் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுக்கமுடியும் என்றார்.

Related Post