Breaking
Mon. Dec 23rd, 2024
நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கறுப்பு கொடிகளை ஏற்றுவதற்காக முயற்சிக்கும் தரப்பினர் இனவாதத்தை தூண்டும் நோக்கில் அவ்வாறு செய்கின்றனர். அமைச்சுப் பதவிகளை எதிர்நோக்கும் சிலரும் இவ்வாறு இனவாதத்தை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளியிட விரும்பவில்லை.இனவாத தரப்புக்கள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் ஈடுபடவில்லை எனவும், நாட்டை மீளவும் யுத்தம் நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளர்.
அரசியல்வாதிகளே நாட்டில் போரை உருவாக்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடக்கா, தெற்காக என பார்க்காது இன மத பேதமின்றி முன்நோக்கி நகரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்ல விரும்புவோரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள விரும்புவோரும் சமாதானத்தை விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

By

Related Post