நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
நேற்று மாலை (26) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது
எனவே கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி தர்சன சமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.