Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை மாற்றங்களினால் நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தென்மாகாணத்திலேயே இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமை புத்தளம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலவுவதாகவும் இதனால் தென்மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கங்கைகளின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துமாறும் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

By

Related Post