Breaking
Sun. Jan 12th, 2025

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முன்னமே அதன் பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று புதன்கிழமை பொது அரச உத்தியோகர்களுக்கு மோட்டார் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “2005லிருந்து ஒவ்வொரு தடவையும் எம்மை விமர்சிப்பவர்கள் மார்ச் மாதத்தில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று பகற்கனவு கண்டனர். இம்முறை வரவு செலவுத் திட்டத்தையும் அதைப் போன்றே சிந்திக்கின்றனர்.

2005 மார்ச்சிலும் 2006 மார்ச்சிலும், 2007 மார்ச்சிலும் தொடர்ந்து வந்த ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனக் கூறிவந்தனர்.

அவ்வாறு கனவு கண்டவர்கள் இம்முறை நாம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தையும் கனவாகவே பார்க்கின்றனர். இது போன்ற ஒரு வரவு செலவுத் திட்டத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எமக்கு இது யதார்த்தம், அவர்களுக்கு இது கனவு” என்றுள்ளார்.

Related Post