-எம்.ஆர்.எம்.வஸீம் –
நாடு செல்லும் வீழ்ச்சிப்பாதையை தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறாமல் நாட்டுக்கு பொருத்தமற்ற மாற்றங்களே இடம்பெறுகின்றன. என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த தேரர் தெரிவித்தார்.
தாய்நாடு எங்கள் அமைப்பு கொழும்பில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
30 வருட யுத்தத்தில் நாங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டோம். தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டியிருக்கின்றது. இதற்காக கடந்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தது.
என்றாலும் அந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு போதுமானதல்ல. எனவே நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. அதற்காக பாரியளவில் பிரசாங்களை செய்தன. மக்களும் மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
ஆனால் தேர்தல் காலத்தில் செய்த பிரசாரத்தின் பிரகாரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்தும் அந்த மாற்றம் இடம்பெறவில்லை. என்றாலும் நாட்டுக்கு பொருத்தமான மாற்றங்கள் இல்லாமலாகி பொருத்தமில்லாத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்காரணமாக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அரச நிறுவனங்களினால் இடம்பெறக்கூடிய சேவைகள் இடம்பெறுவதில்லை.
இவ்வாறு மக்கள் நினைத்து அரசாங்கத்தை கொண்டுவந்த மாற்றங்களை தவிர்ந்த பொருத்தமற்ற மாற்றங்களே நாட்டில் இடம்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார்.