Breaking
Mon. Nov 18th, 2024

பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்­ப­தை முற்­றாகத் தடை­செய்­யு­மாறும் முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நிறை­வேற்­று­வ­தற்கு மாத்­திரம் தனி­யான விஷேட சட்­ட­மொன்­றினை நிறை­வேற்­று­மாறும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

சிங்­கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­வதால் இது தடை­செய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­திலே மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. பௌத்த மதம் அனுமதிக்காத மாடு அறுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும் எனவும் சிங்­கள ராவய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

Related Post