Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது. குளோரின் விநியோகஸ்தர்களின் கருத்தின்படி: நாட்டில் முன்னிலையிலுள்ள இவ்வர்த்தகத்தை சர்வதேச தராதரத்துக்கு உயர்த்த முடியும்.

வடமாகாணத்தில் அமையப்பற்றுள்ள பரந்தன் இரசாயண தொழிற்சாலை (Paranthan Chemical Company) 1985ல் தனது செயற்பாடுகளை முற்றாக இழந்தமையால் நாட்டுக்குத் தேவையான இரசாயணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் இத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். ஆணையிறவில் உப்பு உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்ட போதே வட மாகாண கைத்தொழிற்சாலைகளும் மீள ஆரம்பிக்கப்படத் தயாரானதாக கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏப்ரல் 22ம் திகதி கருத்து வெளியிட்டார்.

கடந்த ஏப்ரல் 22ம் திகதி 260,000 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதலீட்டுடன் ஹொறனை, கஹவத்த கைத்தொழில் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளோரின் களஞ்சியசாலையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் இது தொடர்பில் அவர் தனது அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடனும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். பரந்தன் இரசாயண தொழிற்சாலை சுமார் 65 தொழிலாளிகளைக் கொண்டிருந்ததோடு, 2014ல் அது ரூபா.40 மில்லியன் இலாபமீட்டியதாகவும் அறிக்கைகள் சான்றுபகர்கின்றன. பரந்தன இரசாயண தொழிற்சாலை அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதுடன் திறைசேரிக்கு இலாபப் பங்கினையும் வழங்கிவருகின்றது. ஹொறனை, கஹவத்த கைத்தொழில் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளோரின் களஞ்சியசாலை அமெரிக்க இரசாயனக் களஞ்சியசாலையின் தராதரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தொன் குளோரினை உற்பத்தி செய்யமுடியும்.

‘பரந்தன் இரசாணத் தொழிற்சாலை’ ஆரம்பத்தில் ‘பரந்தன் இரசானக் கூட்டுத்தாபனம் எனும் பெயருடன் இயங்கி வந்தது. இதனை மீள செயற்பாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் எமது இரசாயன இற்க்குமதிச் செலவுகளைக் குறைக்க முடியும். 1985ல் இத்தொழிற்சாலை செயற்பாட்டை இழந்ததிலிருந்து உள்நாட்டு உற்பத்திச் செலவை விட அதிகளவான பணத்தை இறக்குமதிக்காக செலவிடவேண்டியுள்ளது. நாட்டுக்குத் தேவையான முழுக் குளோரினும் திரவமாக இறக்குமதி செய்யப்பட்டு வருவதோடு, அது பரந்தன இரசாயண தொழிற்சாலையில் விஞ்ஞான ரீதியாகக் கையாளப்பட்டும் வருகின்றது. இதில் 98 மூஆனவை நீர்விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நாட்டின் பாதுகாப்பான குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நாங்கள் இதனை இங்கு உற்பத்தி செய்தால் உள்நாட்டு நீர்ப்பாதுகாப்பு மட்டத்தை சிறப்பாக உயர்த்தமுடியும். அதற்காக நாங்கள் பரந்தன் இரசானத் தொழிற்சாலையை மீள செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இத்தொழிற்சாலை 300-400 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதலீட்டுடன் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பரந்தன இரசாயண தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்காக நாங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவேற்பதாகவும் அமைச்சர் கூறுகிறார். இத்தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதன் வாயிலாக எமது உள்நாட்டு குளோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடிவதோடு, வருடாந்தம் இறக்குமதிக்காகச் செலவிடும் 860,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்கவும் முடியும். இதேபோல ஏனைய இரசாயணங்களையும் நாம் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் கிளிநொச்சி மாவட்டத்தில், பரந்தன் எனும் இடத்தில் 1954ல் அரசினால் தாபிக்கப்பட்டதுடன் அங்கு அப்பச்சோடா, குளோரின் திரவம், ஹைதரோகுளோரிக் அமிலம், Zinc chloride மற்றும் மேசை உப்புக்குப் பயன்படும் சில உபகரணங்களும் உற்பத்தி செய்யப்பட்டன. இத்தொழிற்சாலை 1985ல் யுத்தம் காரணமாக தனது செயற்பாட்ட இழந்தது. இதனை மீள ஆரம்பிப்பதால் இரசாயன இறக்குமதிக்கான செலவுகளைக் குறைக்கலாம். தற்போது இறக்குமதியால் வருடாந்தம் சுமார் 864,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா.115 மில்லியன்) வரை செலவாகின்றது.

இத்தொழிற்சாலை அண்மைய காலங்களில் சோடியம் ஹைபொகுளோரைட்டு (Sodium Hypo-chloride) எனப்படும் தூய்மையாக்கப்பயன்படும் இரசாயனங்களையும் (Bleaching Liquid) உற்பத்தி செய்கின்றது. பரந்தன் தொழிற்சாலை சுமார் 217 ஏக்கர் பரப்புடையது. ஆனால் 3தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்றுவந்த யுத்தத்தினால் இது தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Post