Breaking
Mon. Dec 23rd, 2024

மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்து வரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரச நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்து வருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

“பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை“ என்ற கருப்பொருளில் நேற்று (13) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார். வெளிநாட்டுக் கொள்கையில் தற்போதைய அரசாங்கம் மிகவும் தெளிவான நேர்மையான திறந்த ஒரு கொள்கையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய ஒளிவு மறைவுமின்றி எல்லா அரசாங்கங்களுடனும் உள்ள உறவுகளையும் பலப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்தில் எந்த ஒரு அரச தலைவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்பதுடன், அவர்கள் எல்லோருடையவும் பொது நோக்கம் இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்டுத்தப்டுவதைக் காண்பதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நல்லிணக்கத்தினதும் நல்லாட்சியினதும் பெறுமதியை எமது நாட்டிலுள்ள சிலர் விளங்கிக் கொள்ளாத காரணத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எமது நாட்டின் எதிர்கால இருப்பு நல்லிணக்கத்தினதும் மற்றும் நல்லாட்சியினதும் பெறுமதியை யதார்த்தமாக்குவதன் மூலம் மட்டுமேயாகும் என்பதனை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உறவுகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகளை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த புலமைத்துவக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் பிரதான உரையை எம்ஸ்ரடம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராம் மானிக்கலிங்கம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் எச்.எம்.பீ.எஸ் பலிகக்கார வழி நடாத்தியதோடு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாந்து, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி தயான் ஜயதிலக ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post