Breaking
Tue. Dec 24th, 2024
ஜே.வி.பி.யின் பிரச்சார  செயலாளர் விஜித ஹேரத் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகன விபத்து தொடர்பில் விஜித ஹேரத் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜித ஹேரத் மதுபோதையில் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அது பரிசோதனைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி கட்சி ஒழுக்கமானவர்களை உருவாக்கியுள்ளதாகவும், சில தரப்பினர் இந்த விபத்தின் ஊடாக கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவரைக் காப்பாற்ற சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

By

Related Post