ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற நல்லாட்சிக்கான புரட்சியை வெற்றி கரமாக முன்னெடுக்க ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் எமக்கு பெரும்பான்மையை வழங்கி நாட் டில் ஐ.தே.முன்னணியின் ஸ்திரமான ஆட்சிக்கு வித்திட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத் தார்.
அரச மாளிகை அமைப்பது எனது நோக்கமல்ல. உங்கள் வீடுகளை அரசமாளிகை யாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என் றும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஐ.தே.மு.வின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும்போதே ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மேற் கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி ராஜபக் ஷ குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சியை எற்படுத்தினோம். அதன் பின்னர் 100 நாள் வேலைத் திட்டத்தை முன்னெடுத்தோம். மக்களுக்கு சலுகைகளை வழங்கினோம். நல்லாட்சியை வழங்கினோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினோம்.
இன்று ஜனவரி 8 புரட்சியை முன்னோக்கி வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக 60 மாதங்களில் புதிய நாடு என்ற திட்டத்தை முன்வைத்துள்ளோம். இதனை கொள்கைப் பிரகடனம் எனக் கூறுவதை விட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்கள் என்றே கூற வேண்டும். இதனை புரிந்து கொண்டு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். ஜனவரி புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இன்று மீண்டும் இணைந்துள்ளோம். பலவிதமன கருத்துக்கள் விமர்சனங்களைக் கொண்டவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று பட்டுள்ளோம்.
“வெஸ்மினிஸ்டர்” முறைமையிலிருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் புத்தபிரானின் “லெச்சவி” வம்ச ஆட்சிக்கு நாம் செல்ல வேண்டும். எனவே அரசியல் சக்திகளுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல் சிவில் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் என அனைவரினதும் ஆதரவை ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.. அனைவரையும் இணைத்துக் கொண்டு எமது 60 மாத திட்டத்தை முன்னெடுப்போம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களின் ஆணையை மதித்து நிறைவேற்று அதிகாரத்திலுள்ள தன்னிச்சையான அதிகாரங்களை கைவிட்டார். 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்தினோம். எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தில் எமது புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய புரட்சிக்கு எதிரான மீள் புரட்சி இன்று தலைதூக்கியுள்ளது. இதனை தோல்வியடையச் செய்வோம்.
அனைத்து பொருளாதாரக் கொள்கைகளையும் நான் கண்டுள்ளேன். ஆனால் இன்று எமக்கு புதிய கொள்கை தேவை. சமூக அபிவிருத்தியை கொண்ட பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பலர் என அனைத்து சமூகங்களையும் இணைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
வறுமையை முற்றாக ஒழிக்கும் திட்டத்தை முன்னெடுப்போம். ஜனாதிபதியுடன் இணைந்து பாராளுமன்றத்தை. மாகாண சபைகளை நாட்டை கட்டியெழுப்புவோம். நிதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குவோம். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை விட மாறுபட்ட ஆட்சியை முன்னெடுப்போம். அதற்கான புதிய பாதையை தெரிவு செய்து பயணிப்போம்.
எனவே இம்முறை பொதுத் தேர்தலில் ஐ.தே.முன்னணிக்கு மக்கள் அமோகமாக வாக்களித்து பெரும்பான்மை அதிகாரத்துடன் ஸ்திரமான ஆட்சியமைக்க வித்திடவேண்டும். பாராளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் பிரேரணைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு நல்லாட்சியை அர்த்தமுள்ளதாக்குவோம். அரச மாளிகை அமைப்பது எனது நோக்கமல்ல. மக்கள் வாழும் வீடுகளை அரச மாளிகையாக மாற்றுவதே எனது திட்டமாகும். அரச குடும்பமாக வாழ்வது எனது நோக்கமல்ல. ஒவ்வொரு குடும்பத்தையும் அரச குடும்பமாக மாற்றுவதே எனது இலக்காகும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.