Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது  இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்தக் கேள்வி தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஏன் எமது நாடாளுமன்றத்தில் கூட 1947ஆம் ஆண்டு முதலாக எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிக்கின்றன. நாடாளுமன்றில் 1947ஆம் ஆண்டு முதலாக எத்தனையோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாணசபையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதற்காக அது குறித்து நாம் அச்சப்படத்தேவையில்லை.

இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது என்றார். (u)

By

Related Post