வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் அமைப்பதோ அல்லது சமஷ்டி என்ற கோட்பாடோ ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சமஷ்டி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட முடியாது. மாறாக நாட்டில் பிரிவினைவாதமும் இனவாதமும் மட்டுமே உருவாகும். ஆகவே சமஷ்டி மூலம் நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கருத்துகளையும் நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று (24) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது வடமாகாண சபையின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.