நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (8) பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை வெற்றிக்கொள்வதுடன், அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேல்மாகாணம் மற்றும் நாடு பூராகவும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியை கற்பதற்கான மொழி மத்தியநிலையம் ஒன்று இல்லாமல் இருப்பதாகவும்சுட்டிக்காட்டியுள்ளார்.