Breaking
Tue. Jan 7th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், இன,மத பேதங்களுக்கு அப்பால் மன்னார் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை (20) மன்னார், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

  • நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில், 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், சக்தி விளையாட்டுக்கழக மைதானத்தின் சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

  • கற்கடந்தக்குளம் வட்டாரம், இசைமாலைதாழ்வு கிராமத்தின் வீதிகளை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

 

  • நானாட்டான், மன்/ மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சுற்றுமதில் அமைப்பதற்காக 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

 

 

  • 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நானாட்டான், மடுக்கரை பாடசாலை மைதான அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், வடமாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனவ்வர், உப்புக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராஜன் மார்க், பிரதேச சபை உறுபினர்களான ஞானராஜ், சந்திரிக்கா, இணைப்பாளர் சசி உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related Post