Breaking
Sat. Nov 16th, 2024

வடக்கில் மீண்டும் ஒரு வகையான இனவாத யுத்தமொன்றுக்கு சில கட்சிகளும்,அவர்களைச் சார்ந்தவர்களும் துாபமிட்டு வருவதால் எமது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வேண்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழர்களும்,முஸ்லிம்களும் இலங்கையில் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள்,அதில் இரண்டு சமூகமும் உறுதியாக இருக்கின்றது என்றும் கூறினார்.

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி கிராம அதிகாரி பிரிவில் நெடுங்கேணி,சேனைபிளவு,புளியங்குளம் கிராம யுவதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அன்று இந்தத பிரதேசங்கள் எப்படி இருந்தன என்பதை நீங்கள் ஒரு முறை மீளப்பாருங்கள்,இங்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்,ஆனால் அவர்கள் எதனையும் செய்யவில்லை,மக்கள் வாழ்வதற்க வழியில்லாமல் இருக்கின்ற போது,அவர்களுக்கு இன ரீதியான பிழையான கருத்துக்களை ஊட்டி அந்த அரசியல் வாதிகள் தமது லாபங்களை பார்த்து செயற்பட்டனர்.ஆனால் அவ்வாறு இருக்கவில்லை.எமது மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது துணிந்து பேசியுள்ளேன்.அவர்களது தேவைகள் தொடர்பில் நடவடிக்கையெடுத்துள்ளேன்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் அந்த பலத்தினை நீங்கள் தந்த வாக்குகள் மூலம் அரசாங்கம் எனக்கு கொடுத்தது.

இன்று இங்கு நீங்கள் பார்க்கலாம் அதிநவீன பாதைகள்,நெடுங்கேணியினை ஊடறுத்து முல்லைத்தீவுக்கு செல்கின்றது., மின்சாரம், வைத்தியசாலைகள், பஸ்தரிப்பு நிலையம், கூட்டுறவு கடை என பல அரச கட்டிடங்கள் காட்சியளிக்கின்றன. இதன் மூலம் நாம் எதிர் பார்ப்பது இந்த மக்கள் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று,அதற்காக தான் எனது அமைச்சின் மூலம் இந்த 6 மாத தையல் பயிற்சியினை உங்களுக்கு நாம் கொண்டுவந்து கொடுத்ததுடன்,அதன் பின்னர் நீங்கள் வீடுகளில் இருந்து வருமானம் தேடும் வழிகளையும் காண்பித்துள்ளோம்.

நானும் ஒரு அகதி என்பதால் இந்த வன்னி மக்களின் வேதனையினை நான் நன்கிறவேன்,அந்த அனுபவமும்,முகாம் வாழ்க்கையும் தான் என்னை இந்த மக்களுக்கு உதவி செய்ய உந்து சக்தியாக உள்ளது.துரதிஷ்டம்் சில அரசியல் வாதிகள் இந்த மாவட்டத்தில் எதனை செய்தாலும் அதனை தடுகின்றனர்,அப்பாவி மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி அவர்களை வீதிககு இறக்கி மக்களை அவமானப்படுத்தும் வேளைகளை செய்கின்றனர்.

இந்த பிரதேசத்திலும் வீடில்லாப் பிரச்சினைகள் இருக்கின்றன,அதனை எதிர்காலத்தில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளோம்,யுத்தத்தால் அழிந்து போன அனைத்தையும் ஒரு சில வருடங்களில் திருத்திவிட முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்,இந்த நாடு எமது நாடு என்ற உணர்வுடன்,ஏனைய சமூகங்கள் எமது சகோதர மக்கள் என்ற என்னப்பாடுகளுடன் நாம் வாழ்கின்ற பொது சில இனவாதிகள் உங்களுக்குள் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.

அவர்களுக்கு இடம் கொடுக்காமல் இன்று பயிற்சியினை முடித்து வெளியேறும் உங்களை போன்று இன்னும் யுவதிகளின் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் இந்த திட்டம் வெற்றி பெற நீங்களும் எமது அணியுடன் இணைந்து செயற்படுங்கள் என்றும் அமைசை்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்..

Related Post