Breaking
Sun. Feb 16th, 2025

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

By

Related Post