Breaking
Tue. Dec 24th, 2024

நாட்டின் சமகால அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் தலைமையில் ஓர் அணியும் அதே போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையில் வேறொரு அணியுமாக செயற்படுவார்களாயின் நான் ஒரு போதும் நம்பிக்கை துரோகம் இழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸவை விட்டு வெளியேற மாட்டேன் என்றும். எனது விசுவாசத்தின் அடிப்படையிலும், நன்றிக்கடனுக்காகவும் மஹிந்த அணியிலே இருப்பேன் என தேசியப்பட்டியல் பாராளுமன்ற உருப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நவமணி பத்திரிகைக்காவும், இணைய நாளிதல்களுக்காவும் மேற்கொண்ட நேர்காணலின் போது மேற்சொல்லப்பட்ட கருத்தினை தெரிவித்தார்.

மேலும் பல கருத்துக்களை தெரிவித்த அஸ்வர் ஹாஜி…..

நான் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரமதாசாவின் காலத்தில் பாராளுமன்றத்தில் அவருடைய முக்கிய மொழிபேற்பாளராக கடமையாற்றிதன் விளைவாக அவர் தனக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்காக வாய்ப்பினை தந்திருந்தார். நான் தொடர்ந்து எவ்வித தேர்தலிலும் போட்டியிடாமல் ஐந்து முறைகள் பாராளுமன்றம் சென்றுள்ளேன். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்., ஆனால் நான் எவ்வித பதவிகளும் இல்லாமல் கடந்த காலத்தில் பல கஸ்டங்களுக்கு முகம் கொடுத்திருந்த வேலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை கண்டு கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் அவரிடம் அஸ்வர் ஹாஜிக்கு சிறீகொத்தா தலைமைக் காரியாலைத்திலாவது மொழிபெயற்பாளராகவாவது பதவி ஒன்றினை வழங்கி அவருக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டும் ரணில் விக்ரமசிங்க என்னை கண்டுகொள்ள வில்லை.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ என்னை மதித்து எனது நிலைமையினை கருத்தில் கொண்டு தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற செல்லும் வாய்பினை வழங்கினார். அவ்வாறு இருக்கையில் ஜானாதிபதி தேர்தலின் போது கிழக்கு மாகான சபையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாகவும், அவருடைய எதிர்கால வெற்றியை கருத்தில் கொண்டும் தன்னை பதவி விலகுமாறு வேண்டிக் கொண்ட வேலையில் என்னால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. அவ்வாறு மறுப்பு தெரிவிப்பது தூய முஸ்லிமின் பன்புமில்லை. அதன் அடிப்படையிலேயே தான் அவரின் எதிர்கால வெற்றியை கருத்தில் கொண்டும், விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் துரோகம் இழைக்க முடியாத நிலையில் எனது பாராளுமன்ற கதிரையினை மனமுவந்து விட்டுக்கொடுப்புச் செய்தேன்.

ஆனால் இதனை சமூக வலைத்தளங்கலும், பத்திரிகைகளும் என்னை பலவாறாக நான் பொதுபலசேனாவுக்கு ஆதரவளிக்கின்றேன் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான விரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கின்றேன் என்றும் விமர்சித்தும், தூற்றியும் வந்தனர்.

எல்லாவற்றையும் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே விட்டவனாக பொறுமை காத்தேன். தற்போது என்னை ஏசிய, தூற்றியவர்கள் எல்லாம் தன்னிடம் மண்ணிப்பு கேட்கும் நிலைக்கு ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டுக் கொண்டிருய்கின்றனர். பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் முதன் முதலில் கூறியவனும் நானே. ஆனால் ஊடகங்கள் அதனை மறைத்துவிட்டன. ஏன் தற்போது மஹிந்த ராஜபக்ஸ்ஸ கூட தனது தோல்விக்கு பொதுபல சேனாதான் காரணம் என தெரிவித்து வருகின்றார்.

பள்ளிவாயல் உடைக்கப்பட்டது, முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெறுகின்ற சதித்திட்டங்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ வாய்மூடி மெளனித்திருக்கின்றார் என பலவாறு முன்னாள் ஜனாதிபதியினை குற்றம் சாட்டியவர்களும், தற்போதைய அரசாங்கமும் ஏன் ஜெய்லானியில் புத்தர் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என சிங்கள நாட்டில் அதிதீவிரமாக செயற்பட்டு வருகின்ற பேரினவாத அமைப்பினால் பகிரங்கமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பொழுது அமைதியாக இரூக்கின்றனர் என்ற கேள்வியையும் இந்த அரசாங்கத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் நோக்கியவாறு தொடுத்தார்.

Related Post