Breaking
Mon. Dec 23rd, 2024

-எம்.ரீ.எம்.பாரிஸ்-

கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேன்டாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன். என  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு விஷேட பேட்டி..

இலங்கையிலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற சபைகளும் கலைக்கப்பட்டு இந்நாட்டு மக்கள் புதியதொரு பாராளு மன்ற தேர்தல் ஒன்றையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்பாத்து காத்திருக்கும் இக்கால கட்டத்தில் தாம் சார்த்த கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரித்து சென்று புதிய குழுவொன்றை தோற்றுவித்துள்ளதாகவும் மாற்று கட்சியினர்,கட்சி ஆதரவாளர்கள் பொய் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கமாகும்.

அந்த வகையில் நான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதாக பொய் பிரச்சாரங்கள் பேஸ்புக் உள்ளிட்ட இலத்திரநியல் ஊடகங்களில் நயவஞ்சகதணமாக செயற்படும் நபர்களால் பரப்பட்டுள்ளது.

இதனை நாம் முற்றாக மறுப்பதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பேராதவினை பெற்ற கட்சியாகும்.இதயே போன்று அம்பாறை மாவட்டத்திலும் எமது கட்சி தற்பொழுது அமோகமான ஆதரவினை பெற்று வருவதனை சகித்து கொள்ள முடியாத் சிலரின் விஷம தனமான பிரச்சாரமே இதுவாகும்.

எனவே நான் தொடர்ந்தும் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியிலேயே இருக்கின்றேன் என்பதனை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பொய் பிரச்சாரங்களை கண்டு மக்கள் ஏமாத்து விட வேண்டாம் என அன்பாய் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

Related Post