இன்று (5.8.2015) இடம் பெற்ற 8ஆம் தர இரண்டாம் தவணைப் பரீட்சை தமிழ் மொழி வினாத் தாளில் கேட்கப்பட்ட வினாவுக்கு மாணவனொருவன் எழுதிய விடை என்னை வெகுவாக கவர்ந்தது.
“இலவசக் கல்வி சகலருக்கும் கிடைக்க வழி செய்வேன். கல்வியின் தரத்தை உயர்த்துவேன். புதிதாக பாடசாலைகளை உருவாக்குவேன். பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக் கொடுப்பேன். ஆசிரியர், அதிபர் சம்பளங்களை கூட்டுவேன். தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவேன்.
தொழில் நுட்ப கல்வியை விஸ்தரிப்பேன். பல்கலைக் கழகங்களை உருவாக்குவேன். பல்கலைக் கழகத்துக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பேன். படித்து விட்டு தொழில் இன்றி இருப்போருக்கு தொழில் வழங்குவேன்”.
யா அல்லாஹ் என்னைக் கல்வி அமைச்சராக ஆக்குவாயாக என்று பிராத்திக்கின்றேன்.