Breaking
Mon. Nov 25th, 2024
வில்­பத்து பிர­தே­சத்தில் எமது மக்­களோ நானோ காடு­களை அழிக்­க­வில்லை. யானை­க­ளையோ மிரு­கங்­க­ளையோ கொல்­ல­வில்லை. ராவணா பலய அமைப்பின் செய­லாளர் என்னைத் தூக்­கி­லிட வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டுள்­ளமை இன­வா­தத்தின் வெளிப்­பா­டாகும் என கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வில்­பத்து வன பிர­தே­சத்­தி­லுள்ள காடு­களை அழித்து அங்­குள்ள யானை­களை அழிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார் என குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும்,
 ராவணா பலய அமைப்பின் கருத்­துக்கு மறுப்புத் தெரி­விக்­கையில் வில்­பத்து பிர­தே­சத்தில் எமது மக்கள் வன பிர­தே­சத்தை அழிக்­க­வில்லை. அவர்கள் சொந்­த­மண்­ணிலே குடி­ய­மர்ந்­துள்­ளார்கள்.
அது அவர்­க­ளது பூர்­வீக பூமி­யாகும். அவர்­களோ, நானோ வில்­பத்து வனத்­துக்குள் பிர­வே­சித்து மிரு­கங்­களை வேட்­டை­யாட வில்லை. யானை­களை அழிக்­க­வில்லை. அவ்­வாறு எமது மக்­களோ, நானோ செயற்­பட்­டி­ருந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி சவால் விடு­கிறேன். நான் குற்­ற­வா­ளி­யாக இருந்தால் தண்­ட­னை­களை ஏற்­றுக்­கொள்­ளத்­த­யா­ராக இருக்­கிறேன்.
முஸ்­லிம்கள் மீது மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லி­ருந்தே பொய்­யான வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. தற்­போதும் முஸ்­லிம்கள் தவறு செய்­ப­வர்கள், குற்­ற­வா­ளிகள் என்றே சித்­தி­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.
முஸ்­லிம்கள் மனித குலத்தின் மீது மாத்­தி­ர­மல்ல மிரு­கங்கள் மீது கரு­ணை­யுள்­ள­வர்கள் இதையே இஸ்­லாமும் போதிக்­கி­றது. சில பௌத்த அமைப்­புகள் மீண்டும் நாட்டில் இன­வா­தத்­தினை கட்­ட­விழ்க்கும் செயற்­பா­டா­கவே இத­னைப்­பார்க்­கிறேன்.
வில்­பத்­துவில் தமது சொந்தக் காணி­களில் குடி­யே­றி­யுள்ள எமது மக்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்றி விடும் முயற்­சி­யா­கவே இதனை நோக்க வேண்டியிருக்கிறது.
இதனாலே என்மீது பொய்யான கருத்துக்களைப் பரப்பி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்களது கனவு ஒருபோதும் நனவாகாது என்றார்.
யானைக்­குட்­டி­யொன்­றினை அனு­ம­தி­யின்றி வைத்­தி­ருந்தார் என்­ப­தற்­காக தம்­மா­லோக தேரரை கைது செய்­து விளக்­க­ம­றி­யலில் வைக்­க முடி­யு­மென்றால் ஆயி­ரக்­க­ணக்­கான யானைகள் வாழும் வில்­பத்து வன பிர­தே­சத்தை அழித்­து­வரும் அமைச்சர் ரிசாத் பதி­யுதீனை தூக்­கி­லிட வேண்டும் என ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
-ARA.Fareel-

By

Related Post