Breaking
Sat. Nov 16th, 2024
SAMSUNG CAMERA PICTURES

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறினார்.
முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான விஜின்தன்,எஹியான்,வீ.ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –

மல்வானையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு மருந்துகட்டுவேன் என்று கூறியதற்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதே வேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசில் அமைச்சர் றிசாதுக்கு அமைச்சுப் பதவி வழங்க இடமளிக்கப்போவதில்லை என்று விடுத்த சவாலை முகம் கொள்வதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் முடியுமெனில் அதனை ஹக்கீம் செய்து காட்டட்டும் என்றும் கூறினார்.

கடந்த 30 வருடகாலமாக வடக்கு மக்கள் அனுபவித்த துன்பங்கள்,துயரங்கள் என்பனவற்றிலிருந்து அவர்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு உள்வாங்கப்பட்டேன்,இந்த அரசியலை நாம் சமூகத்திற்காகவே செய்து வருகின்றோம்.பதவிகளையும்,பட்டங்களையும் பெற்றுக்கொடுத்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதனையும் செய்யாது வெறும் வீர வசனங்களை பேசி ஏமாற்று அரசியல் செய்வதை சிலர் தெமது சாணக்கியம் என நினைக்கின்றனர்.மக்களுக்கு அவர்கள் செய்த சேவைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாதவர்களின் அரசியல் வங்குரோத்தினை நாம் பார்க்கின்றோம்.

ஒரு தலைமைத்துவம் என்பது சகல மக்களினதும் உரிமைகள்,தேவைகள் என்பனளவற்றினை முன் வைத்து அதனை பெற்றுக்கொடுக்கும் வழியினை செய்ய வேண்டுமே தவிர,மாறாக மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை இல்லாமல் செய்யும் சிறுபிள்ளை அரசியல் செயற்பாடுகளை செய்வது கவலைக்குரியதாகும்.

இன்று மக்கள் எமது பக்கம் வருகின்றதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அம்பாறை மாவட்டத்தில் எமது மயில் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தர் ஹூஸைன் இஸ்மாயில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் தனது காதினை அறுப்பதாக பகிரங்கமாக கூறியது தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்.ஒரு கட்சியின் தேசிய தலைவர் அந்த கட்சியின் மதிப்பும்,மறியாதையும் தெரியாமல் ஒரு கலிமாச் சொன்ன சகோதரர் பாராளுமன்றம் செல்லக் கூடாது என்ற சிந்தனையில் இருக்கின்ற விடயம் சமூகத்திற்கு பெரும் அபத்தத்தை ஏற்படுத்தும்,இவ்வாறான கட்சித் தலைமைகளை நம்பி சமூகத்தை அவர்கள் பின்னால் செல்ல அனுமதிக்க முடியுமா ?.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வந்துள்ளீரகள்,உங்களது வாக்குகளை பெற்றுக்கொண்ட அவர்கள்,உங்களுக்கு எதனை பெற்றுத்தந்துள்ளார்கள்,பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்று கதிரைகளை சூடாக்கியதுடன,சுகபோக வாழ்க்கையினையே அனுபவித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களெனில் இதே நிலையில் தான் தொடர்ந்தும் நீங்கள் தொடர்ந்து இருக்க நேரிடும்.இந்த தமிழ் தேசியத்தின் தலைமைகளாக இரா.சம்பந்தனோ,மாவை சேனாதி ராஜாவோ ஒரு போதும் எம்முடன் தமிழ் பேசும் மக்களது தீர்வு தொடர்பில் பேசியதில்லை.அதற்கு நாங்கள் அழைப்புவிடுத்த போதும்,அதற்கும் அவர்கள் முன்வந்த வரலாறு இல்லை என்பதை இந்த முல்லைத்தீவில் வைத்து கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

நடை பெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில 3 ஆசனங்களை ஜக்கிய தேசிய முன்னணி பெற்றுக்கொள்ளும்,இதன் மூலம் வன்னி மாவட்ட மக்களது குரலை எம்மால் எல்லா சந்தர்ப்பங்களிலும் உரக்க ஒலிக்க செய்ய முடியும்,தமிழ் மக்களது பிரச்சினைகளை காலில் காணப்படும் புண்ணினைப் போனறு வைத்து அதிலிருந்து அரசியல் செய்யும் கலாசாரத்திற்கு நாம் முடிவுகட்ட வேண்டும்.

இன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிலையில் போட்டியிடும் ஜோக்கர் ஒருவர் வலம் வருகின்றார்.அவர் ஒரு ஊடகமொன்றினை வைத்துக் கொண்டு ஏதோ எல்லாம் பேசுகின்றார்.இந்த மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நாங்கள் செய்த முயற்சிகள் ஏராளம்,இன்று அந்த மஹிந்தவை வெற்றி கொள்ளச்செய்ய அவருக்காக இந்த ஜோக்கரும் பிரசாரம் செய்கின்றார்.இந்த ஜோக்கர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்ற கொள்ளச் செய்ய எமது மக்கள் ஆற்றிய தியாகங்கள் அளப்பறியது,நன்றி என்ற சொல்லுக்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது.

எமது அணியில் வேட்பாளராக போட்யிடும் விஜின்தனுக்கு எனது அமைச்சின் கீழ் வரும் பணை அபிவிருத்தி சபையில் தலைவராக நியமித்தேன்,ஆனால் இந்த தமிழ் மக்கனிடம் இருந்து அதனை பறித்தெடுக்கும் பணியினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்தனர்.முல்லை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஒரு தமிழ் அபிவிருத்தி சபையின் தலைவராக இருப்பதை விரும்பாதவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,மக்களிடம் வந்து தேசியத்தை பேசி அரசாங்கத்தினை விமர்சிப்பார்கள்,

ஆனால் அவர்கள் ஜனாதிபதியினை மற்றும் பிரதமரை சந்தித்து பேசுவார்கள்,அவர்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வார்கள்.விஜின்தன் போன்ற தமிழ் மகன் இந்த மண்ணின் விடிவுக்காகவும்,மக்களின் விமோசனத்திற்காகவும் போராடுகின்ற போது அவருக்கு துரோகி என்கின்ற பட்டத்தை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழங்குகின்றனர்.மக்களாகிய நீங்கள் யார் தியாகி யார் துரோகி என்பதை இந்த தேர்தலில் அளிக்கின்ற வாக்கினை கொண்டு நிரூபித்து காட்டுங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

Related Post