ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டமையே தான் செய்த பெரிய தவறென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று -28- கதிர்காமத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் கடமையாற்றும் போது, கடமையாற்ற முடியாத அமைச்சான மக்கள் தொடர்பாடல் அமைச்சை தனக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ருஹனு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் நிதி அமைச்சராக இருந்த ரொனி டி மெல்லின் பெயரை தான் பிரேரித்த போதும் ராஜபக்சவினர் அதனை நிராகரித்ததாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்ந்நன்றியறிதல் உத்தமர்களின் பண்பு என்றும் செய்ந்நன்றியறியாமை ராஜபக்சவினரின் பண்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.