பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஒர் தலைமைத்துவம் இல்லை என்றே மக்கள் கருதுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தமது கருத்து அல்ல எனவும் மக்களின் கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஸக்களே இன்றைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சென்று உரையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.