‘அன்று அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது’ என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘எதிர்க்கட்சியை எந்தநேரமும் ஏசிக்கொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு வேலைகளை செய்யவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, அன்றிருந்த முழு அமைச்சரவையும் பொறுப்பு கூறவேண்டும். சிறிசேனவும் பொறுப்பு கூறவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.