Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கட்சியின் இரண்டாவது பதவிக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தான் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு பதிலளித்த சந்திரிகா மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திரக் கட்சியில் அவ்வாறான பதவியை வழங்க எவ்விதமான தீர்மானமோ பேச்சுவார்த்தைகளோ இடம்பெறவில்லை என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார்.

ஆனால் நான் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.

By

Related Post