Breaking
Fri. Jan 10th, 2025

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.

பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர் ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றது இல்லை.

எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்றால் அவன் தீவிரவாதிதான் அதில் மாற்றமில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியர் அதை செய்யமாட்டார். அதற்கு எங்கள் மதம் தடைவித்துள்ளது” என்று கூறினார்.

By

Related Post