Breaking
Wed. Dec 25th, 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று 2/12/2014 கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர்,
நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குக் கூட செல்லமாட்டேன்.
அது மட்டுமல்ல பதவியேற்று நூறு நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகள் கொண்ட அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என்று கூறினார் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசும்போது,
மக்களின் ஜனநாயக உரிமைகளையும் அரசியல் கட்சிகளையும் முடக்குவதற்காகவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி ராஜபக்ச மக்கள் முன்வந்துள்ளதாகவும், இந்த முயற்சிகளை தோற்கடிக்க மக்கள் முன்வரவேண்டுமென்றும் தெரிவித்தார்.
நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜனநாயகக் கோட்பாடுகளை அழித்து தனது குடும்ப ஆட்சியொன்றை உறுதிபடுத்துவதற்காகவே ஜனாதிபதி ராஜபக்ச முன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் ரணில் விக்கிரமசிங்க.
ஜனநாயக கட்சியின் தலைவர் மனோ கணேசன் பேசுகையில்,
தற்போது சிவில் நிர்வாகம் முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது மாறி இயல்பு நிலை திரும்பவேண்டுமென்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு வாக்குறுதி தரவேண்டுமென்று கோரினார்.

Related Post