Breaking
Mon. Dec 23rd, 2024
நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கை ஓகஸ்ட் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.
ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாமல் ராஜபக்‌ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகளை அவர் தொடர்ச்சியாக நிராகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாமல் ராஜபக்‌ஷவின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என ஆணைக்குழு தனது வாதத்தை முன்வைத்திருந்தது. இது தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டிய ஊழல் தொடர்பான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருக்சி விக்கிரமசிங்க, இதனை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு நாமல் ராஜபக்‌ஷவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த ஆணைக்குழு, அவற்றை  பிரதிவாதி தரப்புக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில், வழக்கு அடுத்த மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

By

Related Post