முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை சம்பந்தமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவை தவிர ஏனையோர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்த நீதவான், நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் 6 நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புகளை இடைநிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.