நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 70 மில்லியன் மோசடி தொடர்பில் இன்று (11) நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்க்ஷ,இலங்கையின் முதன்மையான விளையாட்டு கழகத்தின் ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து நன்கொடை கேட்டுள்ளார்.
இருப்பினும் இந்த பணம் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாமல் இன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,இந்த குற்றச்சாட்டுக்களுக்காக கூட்டு எதிர்கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விமல் வீரவன்ச மற்றும் மகிந்தானந்த அலுத்கமகேவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.