Breaking
Wed. Mar 19th, 2025

நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுடன் சுதர்சன கனோகொட என்ற மற்றுமொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் நிறுவனத்தில் இந்த நபர் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.

நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சென்றுள்ளார்.

நாமல் ராஜபக்ச இரவு உணவை சிறைச்சாலையில் பெற்றுக்கொண்டுள்ளார்.

இன்று காலை முதல் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள வேண்டுமென நாமல் கோரினால் அதற்கு அனுமதியளிக்க முடியும் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

By

Related Post