Breaking
Fri. Nov 22nd, 2024
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, நாமலின் சகோதரரான யோஷித ராஜபக்ச சிக்கியுள்ள சி.எஸ்.என். விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணமொன்றும் தமக்கு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாமலுக்கு எதிரான விசாரணைகளில் அவரின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய மேலும் 7 பேரும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தொடர்பிலும் பிரத்தியேகமாக கவனமெடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவ்வுயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் 2006ம் ஆண்டின் 5ம் இலக்க கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்ப்டுத்தப்பட்டுள்ளன.

By

Related Post