Breaking
Wed. Mar 19th, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் இரவு சாப்பாடு சிறைச்சாலையிலேயே வழங்கப்பட்டது.

70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.

By

Related Post