இர்ஷாத் றஹ்மத்துல்லா
நாம் மானம் மறியதையுடன் வாழ வேண்டும்,மதச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதற்காக தான் எமது கட்சி இந்த முடிவை எடுத்தது பட்டம்,பதவிகளை எமது கட்சி ஆசைப்பட்டிருந்தால் தற்போதுள்ள 62 அமைச்சுக்களில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பெரிய அமைச்சை கட்டி ஆழ்ந்திருக்கலாம் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது கட்சியில் தெரிவான வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
வவுனியா மாவட்டத்தில் பட்டானிச்சூர் பிரதேசத்துக்கான பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து தற்போது உரையாற்றும் போதே தேசிய தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
எமது கட்சி எடுத்த முடிவுக்கு முழுமையாக கட்டுப்பட்டார்.அவருக்கு ஆளும் கட்சியில் இருந்து பல அழைப்புக்கள் வந்தன,பட்டம்,வாகனம்,பணம் தருவதாக கூறிய போதும்.அவர் எம்மீது கொண்டிருந்த நம்பிக்கையும் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அதனை தட்டிக்கேற்கும் நேர்மையான அரசியல் பாதையினை தெரிவு செய்ததது ஒரு முன்மாதிரியான சம்பவமாகும்.
எமது மாவட்ட மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் காலம் ஏற்பட்டுள்ளது.வடமகாண ஆளுநரை கொண்டும்,இரானுவத்தை கொண்டும் எமது வாக்குகளை தடுக்க சிலர் முற்படுகின்றதாக அறிகின்றோம்.அவர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்ளும் விடயம்.நீங்கள் நாட்டுக்கு நல்ல பணிகளை ஆற்றியுள்ளீர்கள்,அந்த நன்றி மக்கள் உள்ளங்களில் இருக்கின்றது.இதனை நீங்கள் தொடர்ந்து அதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.
எதிர்வரும் 8 ஆம்திகதி பொதுவேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்தில் நாம் ஒன்று பட்டு எமது பிரசாரப்பணியினை ஓய்வின்றி முன்னெடுப்போம் என்றும் அழைப்புவிடுத்தார்.