Breaking
Sat. Nov 23rd, 2024

சமீப காலமாக எமது ஊர்களில் இருக்கும் வைத்தியசாலைகளில் இரத்தம் பற்றாக்குறை இருப்பதாக சில தேடல்களிலும் , செய்திகளிலும் தெரிய வருகிறது. ஆகவே எமது ஒரு சொட்டு இரத்த தானத்தை செய்து ஒரு உயிரை காப்பாற்றுவோம்.

நமது ஊரில் நம்மோடு கலந்த நம் சொந்தங்களுக்கோ , உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ மற்றும் பலருக்கும் ஏதேனும் ஒரு விபத்து அல்லது அறுவை சிகிச்சை நடந்தாளோ அவசர காலங்களில் இரத்தம் தேவைப்படுகிறது. அப்படி தேவைப்படும் பொழுது அவர்கள் இரத்தம் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

இதனை போக்க நாங்கள் நமது ஊர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இரத்தம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் உங்களுக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று இரத்தத்திற்காக ஏங்கிச் சாய்ந்து மடியும் பல உயிர்களுக்கு மத்தியில்… இவர்களை காப்பாற்ற இரத்த தானம் செய்வோம்.

இரத்த தானம் செய்வதற்கு சில தகவல்கள் :

1. இரத்ததானம் அளிப்பவரின் வயது 18 – 20 மேல் இருந்தால் நல்லது.

2. இரத்ததானம் அளிப்பவரின் எடை 50KG மேல் இருத்தல் நல்லது.

3. இரத்ததானம் அளிப்பதற்கு முன் ஒரு வருடத்திறகுள்ளாக கடுமையான நோயினாலோ, பாதிப்பினாலோ (டைப்பாய்டு, தேல் வியாதிகள், ஆஸ்துமா, எய்ட்ஸ்) அதிகப்படியான மருத்துவ சிகிச்சை பெற்றிருக்க கூடாது.

4. இரத்ததானம் அளிப்பதற்கு முன் மது  அருந்தியிருக்கக்கூடாது.

5. இரத்ததானம் அளிப்பதினால் நமது உடலில் புதிய இரத்த செல்கள் உற்பத்தியாகி நமது உடலுக்கு நன்மை பயக்கும். இரத்ததானம் பெறுவதினால் ஒரு ஏழையும் மறு வாழ்க்கை பெற்று பயனடைகிறார்.

6. ஒரமுறை அளிக்கப்பட்ட இரத்தத்தின் அளவு மறுபடியும் 20 முதல் 30 நாட்களில் பழைய நிலைமைக்கு உற்பத்தியாகிவிடும்.

7. ஒருமுறை இரத்ததானம் அளித்த பின் மறுபடியும் 3 மாதம் கழித்த பிறகுதான் அடுத்த இரத்ததானம் அளிக்க வேண்டும்.

உங்களால் இயன்ற வரை சேர் செய்யுங்கள்

Jeezan Bhai

Related Post