வெள்ளைக்காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலைதூக்கியுள்ளது. நாய்களுக்கான அனுமதிப் பத்திரத்திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொது எதிர்க்கட்சியினர்.
சிறுநீரக நோயாளர்களின் இரத்தப் பரிமாற்றம் செய்யும் கட்டணத்திற்கும் புற்று நோயாளர்களின் எக்ஸ்ரேக்கும் 15 வீத வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியது.
பாராளுமன்ற குழு அறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணி யின் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
பொது எதிரணியினர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;
இலங்கையர்களிடம் அனைத்து விடயங்களிலும் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் வரிகளை அறவிட்டனர். இன்று நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு வெள்ளைக்கார ஆட்சி தலையெடுத்துள்ளது.
எதிர்காலத்தில் நாய்க்கும் மனித உடலுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சிறுநீரக நோயாளர்களின் இரத்தப்பரிமாற்றம் புற்று நோயாளர்கள் “எக்ஸ்ரே” உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் 15 வீத வற்வரி அறவிடப்படுகின்றது.இது பெரிய அநீதியாகும்.
கடந்த ஆட்சியில் வற்வரியானது தொலைபேசி கட்டணங்கள், சுகாதார சேவைகள், மின் கட்டணங்களுக்கு விலக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று இவை அனைத்திற்கும் வற்வரி அறிவிடப்படவுள்ளது. இதனை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கலாம். நாமும் நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றனர்.