Breaking
Sat. Nov 30th, 2024

நாளைய தினத்தின் சவால்களை பற்றி சிந்தித்து காலத்தை வீணடிப்பதை விடுத்து அதனை எதிர்கொண்டு இன்றைய செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் மேடையில் எவ்வாறு தலைகாட்டுவது என சிலர் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியமையே முக்கிய விடயமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சியனேகோரலை பிரதேச மக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த நிகழ்வி;ல் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உரையாற்றுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல் பிரமுகர்களோ இல்லாத தருணத்தில் பொது மக்களே தம்முடன் இருந்ததாக குறிப்பிட்டார்.
எங்கே செல்கிறோம். என்ன செய்ய போகிறோம் என்ற நிலையான குறிகோள் இன்றி செயற்பட்ட தருணத்திலும், மாற்றத்திற்காகவும். பொது வேட்பாளர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவும் பொதுமக்கள் தமக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார்.
எனவே. எதிர்கால முன்னெடுப்புகளின் பொது தமது அரசியல் கட்சிகளினதும், பொதுமக்களின் பங்களிப்பு பெருவாரியாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தெரிவித்தார்.

Related Post