ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது.
இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார தேரரின் கைது நடவடிக்கையை பெரும் பெருட்டாக கருதவில்லை என்பதால் அவ்வமைப்பு எதிர்கால நகர்வு தொடர்பாக அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை திரட்டும் பணியும் அவ்வமைப்புக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாளை ஒன்பதாம் திகதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவருக்கு எதிராக சட்டம் மிக கடுமையாக தனது கடமையை செய்யும் என பொதுபல பல சேனா அமைப்பு அச்சத்தில் உள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர்கள் மூலம் அறியமுடிகிறது.