Breaking
Thu. Dec 26th, 2024

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

பின்னர் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஜெயலலிதா, ஆளுனர் ரோசையாவிடம் வழங்குவார்.இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு ஆளுனர் முறைப்படி அழைப்பு விடுப்பார்.

இந்நிலையில், ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு வசதியாக இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் ஆளுனரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post