தேசிய அரசாங்கத்தின் சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேசிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் நாளை முதல்நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.450 ரூபா முதல் 1000 ரூபா வரையிலான வவுச்சர் வகைகளை பகிர்ந்தளிப்பதற்கு இம்முறை 26,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாளை 1ஆம் திகதி முதல் சகல பாடசாலை அதிபர்களுக்கு இந்த வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்படும் குறிப்பிட்ட இந்த வவுச்சர் அதிபர்கள் ஊடாக வகுப்பாசிரியர்களிடம் சென்று மாணவர்களுக்கு சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கடைகளில் சீருடைகளை கொள்முதல் செய்ய முடியும். மிகுதி பணம்கிடைக்குமாயின் மாணவர்கள் தமக்கு ஏற்றவாறான எதனையும் பெற்று கொள்ள முடியும்.
விநியோகிக்கப்படும் வவுச்சர்கள் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு 15 வகைகளில்வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 1–5 மாணவர்கள் 450 ரூபா வவுச்சர், 1–5 மாணவியர்கள் 400 ரூபா வவுச்சர், 1–5 மாணவியர்கள் முஸ்லிம் பாடசாலை பர்தா தலைக்கவசம் 600 ரூபா வவுச்சர், 1–5 மாணவியர்கள் சீருடை 720 ரூபா வவுச்சர், 6–9 மாணவர்கள் மேற்சட்டை மற்றும் காற்சட்டை 525 ரூபா வவுச்சர், 6–9 மாணவியர்கள் 500 ரூபா வவுச்சர், 6–9 முஸ்லிம் வவுச்சர், மாணவியர்கள் 700 ரூபா வவுச்சர், 6–9 மாணவியர்கள் சீருடை 800 வவுச்சர்,
10–13 மாணவர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாணவர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாணவியரின் துணிக்காக 600 வவுச்சர், 10–13 முஸ்லிம் மாணவியர்கள் 800 ரூபா வவுச்சர், 10–13 மாணவியர்கள் 1000 ரூபா வவுச்சர், 1–7 காவி உடை 1300 ரூபா வவுச்சர், 8–13 மாணவர்கள் 1700 ரூபா வவுச்சர், ஆகிய அடிப்படையிலேயே இந்த வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
இலங்கையில் உள்ள 43 இலட்சம் மாணவர்களது சீருடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.